"வனத்தையும், மக்களையும் இணைக்க வேண்டிய மீடியாக்களிடம் போலியான செயல்பாடு"

கோவை : வனத்தையும், மக்களையும் காட்சிகளாலும், வார்த்தைகளாலும் இணைக்கும் முக்கிய கருவியாக இருக்கும் மீடியாக்கள், வாசகர்களை கவருவதற்காக போலியான வனவிலங்கு புகைப்படங்களை பதிவிடுவதாக இறகுகள் அமைப்பின் நிறுவனர் என். ரவீந்திரன் தெரிவித்தார்.

கோவை : வனத்தையும், மக்களையும் காட்சிகளாலும், வார்த்தைகளாலும் இணைக்கும் முக்கிய கருவியாக இருக்கும் மீடியாக்கள், வாசகர்களை கவருவதற்காக போலியான வனவிலங்கு புகைப்படங்களை பதிவிடுவதாக இறகுகள் அமைப்பின் நிறுவனர் என். ரவீந்திரன் தெரிவித்தார். 



சர்வதேச வன தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மையத்தின் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்கல்லூரியின் சங்கமம் அரங்கில் நடைபெற்றது. அதில், இந்திய பறவை மனிதன் எனப்படும் சலிம் அலியின் முன்னாள் மாணவரும், இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக, இயற்கை பாதுகாப்பிற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை காட்டிலும், மீடியாக்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களை மாற்று கோணத்தில் காட்டுவதாக அவர் கூறினார். 

"மீடியாக்கள் உண்மைநிலையை வெளிப்படையாகக் காட்டுவது மிகவும் அரிதாகிவிட்டது. உணர்வுகளை தூண்டுவதற்கும், வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே மீடியாக்கள் செயல்படுகின்றன." என்கிறார் இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன்.



இதற்கு உதாரணமாக, 5 தலையுடைய பாம்பு போன்ற போலியான புகைப்படங்கள் பதிவிட்டிருப்பதை அவர் மாணவர்களிடம் எடுத்துக் காட்டினார். மேலும், வனவிலங்கு புகைப்படக்கலைக்கான நெறிமுறைகளையும், செய்யக் கூடாதவற்றையும் மாணவர்களிடம் அவர் விளக்கிக் கூறினார். விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதியசங்கள் பற்றிய கல்விக்கு வனவிலங்கு புகைப்படங்கள் மிகவும் அத்தியாவசியம் என்றார். 

 

மேலும், இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், 1,500 ஆசிரியர்கள் மற்றும் 10,000 மாணவர்கள் பங்கேற்கும் முகாம் இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...