கோவை : காளியமங்கலம் அருகே வனப்பகுதிக்கு மிக அருகே கட்டப்பட உள்ள தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு தடை விதிக்கக்கோரி மதுக்கரை வன அதிகாரிக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகில் அமைந்துள்ளது காளியமங்கலம் கிராமம். இப்பகுதி மதுக்கரை வனச்சரக வட்டத்திற்குள் வருகிறது. இங்கு வனப்பகுதிக்கு மிக அருகில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தினால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், கட்டிடம் கட்டப்படும் பகுதியானது, யானைகளின் வழித்தடமாகும். இந்த தடத்தை மறித்தால், யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இவ்விடமானது, நீர்வழிப் பாதையாகும். இங்கு சுமார் 2,000 மக்கள் குடியேறும் போது, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகள் மிகவும் பாதிக்கப்படும். எனவே, வனவிலங்குகள், சுற்றுச்சூழல், கிராம மக்கள் மற்றும் விவசாயம் நலன் கருதி இத்திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.