ரயிலில் பயணிகளின் மொபைல் போன்களை திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளது.

கடந்த 14-ம் தேதி ஷாலிமார் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜே.ஆர். நடராஜன் என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரயில் காட்பாடி சந்திப்பை அடைந்த போது, சந்தேகப்படும் வகையில் வந்த நபரை அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது, அந்த நபர் பயணிகளின் மொபைல் போனை திருடியது தெரியவந்தது. பின்னர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த நபர் ஒப்படைக்கப்பட்டான்.
இந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் ஜே.ஆர். நடராஜனுக்கு, சென்னையில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ரயில்வே போலீசார் கவுரவித்தனர்.