அக்னிதேவி படம் திரையிடப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் : நடிகர் பாபி சின்ஹா வழக்கறிஞர் பேட்டி

கோவை : நீதிமன்ற உத்தரவை மீறி அக்னிதேவி படம் நாளை திரையிடப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என திரைப்பட நடிகர் பாபி சின்ஹா வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


கோவை : நீதிமன்ற உத்தரவை மீறி அக்னிதேவி படம் நாளை திரையிடப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என திரைப்பட நடிகர் பாபி சின்ஹா வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கோவை சுங்கம் ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்த சீண்டோ ஸ்டுடியோஸ் (seantoa studio's) சார்பில், ராஜேஷ்குமார் எழுதிய கதையை, கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திரைப்பட நடிகர் பாபி சின்ஹாவை வைத்து திரைபடமாக எடுக்கப்பட்டது. திரைபடத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டு மீதம் உள்ள காட்சிகளை டூப் போட்டு காட்சிகளை எடுத்து உள்ளனர். இதனை அறிந்து நடிகர் பாபி சின்ஹா, சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்துள்ளதாக புகார் அளித்து உள்ளார். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘அக்னிதேவ்’என்ற பெயரில் பதியப்பட்ட திரைபடத்தை அக்னிதேவி என்ற பெயரில் நாளை வெளியிடப்படும் என நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் செய்துள்ளன. 

இதனை அறிந்த நடிகர் பாபி சின்ஹா தரப்பில் கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதி பொறுப்பு மலர்மன்னன், தற்போதைய நிலையிலேயே (status quo)தொடர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த திரைபடத்தை பார்வையிட்டு உண்மை தன்மையை அறிந்து நீதிமன்ற அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் கார்த்திகா என்பவரை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.



இது குறித்து பாபி சின்ஹா தரப்பு வழக்கறிஞர் பரமேஸ்வரன் கூறியதாவது :- நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட கூடாது. மீறி வெளியிடும் பட்சத்தில் இழப்பீடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு படத்தை வெளியிடும் திரையரங்கு, வெளியிடும் அனுமதி தரும் கியூப் அமைப்பு, சீண்டோஸ் ஸ்டுடியோ மற்றும் அதன் உரிமையாளர் ஜான் பால்ராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபடும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...