கோவை மாவட்ட ஆட்சியரின் கேம்ப் ஆபிஸ் குடியிருப்பில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸில் உள்ள குடியிருப்பில் இருக்கும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸில் உள்ள குடியிருப்பில் இருக்கும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி. இவர் தனது மனைவி துளசிமணி மற்றும் மகன் விக்னேஷ் (25) ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் குடியிருந்து வருகிறார். பொன்னுசாமி அங்கு உதவியாளராக உள்ளார். இந்த நிலையில், இவரது மகன் விக்னேஷ் இன்று மசக்காளிபாளையத்தில், 60 வயது நண்பர் ஒருவர் இறப்பிற்கு சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியவர், வீட்டின் உள்ளே சென்று கதவை தாளிட்டு கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததைக் கண்டு, கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, விக்னேஷ் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதைத் தொடர்ந்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் முகாமில் அலுவலக ஊழியரின் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...