கோவை : கோவை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், லந்தனா கமாராவில் நாற்காலிகளை செய்யும் கைத்தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் பசுமை திறன் மேம்பாட்டு திட்டமும், கோவை அமிர்தா விஸ்வா வித்யபீதமும் இணைந்து சிறுவாணியை சுற்றியுள்ள சிங்கம்பதி, கல்கொதிபதி மற்றும் சர்கார்பொரதி உள்ளிட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த 100 பழங்குடியினருக்கு சுயதொழில் கற்றுக் கொடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, உண்ணிச் செடியான லந்தனா கமராவைப் பயன்படுத்தி மரச்சாமான்களை தயாரிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களில் 30 பேர் முறையாக பயிற்சி பெற்று, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுள்ளனர்.

இவர்களுக்காக சிங்கம்பதி கிராமத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு லந்தனா கமாரா செடிகளைப் பயன்படுத்தி நாற்காலிகளை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, செடிகளை எவ்வாறு பயன்படுத்துவது, எப்படி நாற்காலிகளை உருவாக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பெங்களூரூவைச் சேர்ந்த பயிற்சியாளர்களின் கீழ் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த செவ்வாய்கிழமை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

"வனப்பகுதிகளில் உட்புறத்தில் வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பின்னர், பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்து, அதன்மூலம் பயனடையலாம். இந்த தயாரிப்புகள், மூங்கில்களால் செய்யப்படும் பொருட்களை விட விலை குறைவானது. லந்தனா கமாராவில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் ரூ. 14,000 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன், ஒப்பிடும் போது, மூங்கில் அல்லது மரங்களில் செய்யப்பட்ட பொருட்கள் இருமடங்கு விலை அதிகமாகும்," என்கிறார் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், அமிர்தா விஸ்வா வித்யபீதத்தின் இணை பேராசிரியருமான மாயா மகாஜன்.

இதனிடையே, இந்தத் திட்டத்தினால் தயாரிக்கப்படும் பொருட்களை கோவை குற்றாலம், அமிர்தா விஸ்வா வித்யபீதம் மற்றும் ஈஷா யோக மையம் ஆகிய இடங்களில் விற்பனை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
"நாங்கள் நாள்தோறும் கூலி வேலைக்காக நகரங்களை நோக்கி செல்வோம். ஆனால், தற்போது எங்களது கிராமத்திலேயே இதுபோன்ற வாய்ப்பை வழங்கியுள்ளனர்," எனக் கூறுகிறார் சிங்கம்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். சின்னத்தாயி.