கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள், வீதிகளில் துப்புரவுப் பணிகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குறைகளின்றி பணிகளை துரிதமாகவும், நாள்தோறும் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சியினை தூய்மையான மாநகராட்சியாக சிறந்து விளங்க பணியாற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் அறிவுறுத்தினார்.
மேலும், சாலையோரங்களில் மின்சார வாரியத்தினரால் மரக்கிளைகள் வெட்டும் பணிகள் நடைபெறும் போது, மின்வாரியத்தினருடன் இணைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும், குப்பைகள் சேராத வகையிலும், அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியிலுள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் தூய்மையாகப் பராமரித்திட வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக குடிதண்ணீர் வசதியினையும், கழிப்பிட வசதியினையும் நல்லமுறையில் பராமரித்திட வேண்டும். மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும், என அவர் அறிவுறுத்தினார்.