கட்சி தாவுபவர்களைப் பற்றி அ.ம.மு.க. எப்போதும் கவலை கொள்ளாது : முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி

கோவை : கட்சி விட்டு கட்சி தாவுபவர்களைப் பற்றி அ.ம.மு.க. எப்போதும் கவலை கொள்ளாது என முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : கட்சி விட்டு கட்சி தாவுபவர்களைப் பற்றி அ.ம.மு.க. எப்போதும் கவலை கொள்ளாது என முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தெரிவித்துள்ளார். 

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து, கட்சியில் இருந்து விலகி, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து, எந்தவித தகவலும் இல்லாமல் வி.பி. கலைராஜன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வின் ஐக்கியமாகிக் கொண்டார். 

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர். அப்பாதுரையின் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். சின்னசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- நாங்கள் முதுகில் குற்றுபவர்கள் இல்லை. கட்சி விட்டு கட்சி தாவுபவர்களைப் பற்றி அ.ம.மு.க. எப்போதும் கவலை கொள்ளாது. ஆனால், அனைவரையும் கவரக்கூடியவராகவும், நம்பிக்கை மிகுந்த தலைவராகவும் டி.டி.வி. தினகரன் திகழ்ந்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கண்காணித்துக் கொண்டுதான் வருகிறோம். அவர்களின் நடத்தை எங்கள் தலைமையுடன் ஒத்துப் போகவில்லை எனில், அவர்களை அகற்றுவதற்கும் பயப்பட மாட்டோம்." என்றார். 



இதைத் தொடர்ந்து, கோவை தொகுதியின் வேட்பாளர் அப்பாதுரை பேசுகையில், "உங்களைப் போல நானும் சாதாரண கட்சி தொண்டன் தான்," எனக் கூறினார். 

முன்னதாக, பூத் வாரியாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது குறித்து கட்சியின் தலைவர்களுக்கு மாவட்ட மக்களவை தேர்தல் பொறுப்பாளர் சிவசாமி ஆலோசனை வழங்கினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...