நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லை : வைகோ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்தியிருந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் இதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஒரு சில சிறிய கட்சிகள் ஒப்புக்கொண்டன. இருப்பினும், ம.தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...