பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை. 

இதனிடையே, பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீடு ,பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரசின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல, இந்த சம்மனில் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கடையினரை இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளாக இணைக்கப்படுவார்கள் என பொதுவெளியில் பேசப்பட்டு வரும் சூழலில், காங்கிரஸின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...