கோவை : வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்றால் இந்த எம்.எல்.ஏ. பதவி எதற்கு..? என பேசி தமிழக அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்த கனகராஜ் எம்.எல்.ஏ.வின் மரணம் அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ். இவர் இன்று காலை சுல்தான் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வழக்கம் போல செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையேயும், சூலூர் பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனகராஜ் எம்.எல்.ஏ சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க.வின் தீவிர தொண்டராக இருந்து வந்தார். மேலும், கோவை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்த கனகராஜ், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எம்.எல்.ஏ. ஆனது முதல் கனகராஜ் தமிழக அளவில் பரபரப்புக்கு பெயர் போனவர். இவர் ஊடகங்களில் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
அதேபோல, கடந்த ஆண்டு சூலூரில் சாலை விரிவாக்கம் செய்யப்படாவிட்டால், நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பெரிய குயிலி அருகே கடந்த 2017ஆம் ஆண்டு கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்ததை விபத்து வழக்காக பதிவு செய்ய கூடாது. இது அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என வெளிப்படையாக பேசியதுடன், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், அணி மாறி விடுவேன் என்றும் அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே தமிழக அரசுக்கு மிரட்டல் கொடுத்தார். பின்னர், தமிழக அரசு அந்த பிரச்சினைக்குரிய குவாரியை மூடியது.
அதேபோல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு
வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு இந்த எம்.எல்.ஏ பதவியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது, பதவியை ராஜினாமா செய்து விடலாம் போல் தோன்றுகிறது என அவர் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.
சாமளாபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய இவர். அத்துடன் பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் முழக்கமிட்டவர்.
அதேபோல, கனகராஜ் அ.தி.மு.க. கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியை அடிக்கடி மிரட்டும் அளவிற்கு தனிமனித தைரியத்துடன் செயல்பட்டவர். மேலும், அவரது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலிருந்த பிரச்சினைக்குரிய கல்குவாரியை மூட தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து மூட வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
எம்.எல்.ஏ.கனகராஜ் இன்று காலமான நிலையில், அவரது ராஜினாமா பேச்சுக்கள் அடிக்கடி ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாவது குறிப்பிடத்தக்கது