"கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல" : ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா பேச்சு

கோவை : கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று கோவை ஆதரவற்ற சேவா நிலைய பள்ளி தன்னம்பிக்கை ஊட்டும் விழாவில் ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா தெரிவித்தார்.

கோவை : கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று கோவை ஆதரவற்ற சேவா நிலைய பள்ளி தன்னம்பிக்கை ஊட்டும் விழாவில் ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா தெரிவித்தார்.

கோவை சிரியன் சர்ச் ரோட்டில் அமைந்துள்ள சேவா நிலைய பள்ளியில் மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது. விழாவிற்கு கோயம்புத்தூர் ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

விழாவில் ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா பேசும் போது :- நான் எனது வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்தேன். எனக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின்பு எனது வாழ்க்கையே சிதைந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால், எனது கல்வி, தன்னம்பிக்கையும், எனது கணவரின் ஓத்துழைப்பும் என் வாழ்க்கையை நல்ல நிலைமைக்கு உயர்த்தி விட்டது. நம் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானதாகும். நாம் கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை. வாழ்நாள் முழுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிக்க வேண்டும். நம்மிடம் உள்ளதை வைத்து சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஒருவரின் அழுகு என்பது அவரின் முகத்திலோ, உடலமைப்பிலோ இல்லை. அவரின் மனதில் தான் உள்ளது. நாம் காணும் கனவு மிகவும் வலமையுள்ளதாக இருக்க வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறும். 

மாணவியர்களாகிய நீங்கள் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு சேவையாற்ற வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போதிலிருந்தே நீங்கள் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு சொல்வி கொடுக்க வேண்டும்,இவ்வாறு அவர் பேசினார். 

பின்பு மாணவியர்களின் கேள்விக்கு அவர் பதில் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...