திருப்பூர் : வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை என திருப்பூரில் வாக்குசேகரித்த ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு தி.மு.க.வின் ஆ.ராசா பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :- வெற்றியானாலும், தோல்வியானாலும் தொகுதி மக்களை என்றும் மறந்ததில்லை. கடந்த காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே இரண்டு அலுவலகங்களை முதன்முதலில் திறந்துவைத்த ஒரே எம்.பி உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா என்பதை மறந்து விடாதீர்கள். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவரை, இதுவரை நானும் பார்த்ததில்லை.

நீங்களும் பார்த்ததில்லை. எனவே, மீண்டும் ஒருமுறை ஏமாந்துவிடாமல், தமிழ்நாட்டின் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டவும், மத்தியில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மதவாதம் பிடித்திருக்கின்ற மோடி அரசை அகற்றவும், மு.க ஸ்டாலின் உருவாக்கியிருக்கின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்,என கூறினார்.