கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,248 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு 2-வது கட்டமாக வரும் ஏப்., 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளிட்ட படைகளை ஸிலை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, மாநகருக்குட்பட்ட பகுதிகளில் 790 துப்பாக்கிகளும், ஊரக எல்லைக்குட்பட்டு 721 துப்பாக்கிகளும் என மொத்தம் 1,248 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“இந்த வாரத்திற்குள் எஞ்சிய உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், வங்கிக் பாதுகாவலர்களிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.