கோவையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி

கோவை : 100 சதவிகித வாக்குப்பதிவு இலக்கினை அடைய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார்.

கோவை : 100 சதவிகித வாக்குப்பதிவு இலக்கினை அடைய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். 



இப்பேரணியில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேஷன், சிந்தாமணி கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சிவக்குமார், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்ததாவது :- இந்திய தேர்தல் ஆணையம், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

கோவை மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள், குறும்படங்கள், வீதி நாடகம், தெருக்கூத்துகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று வாக்குப்பதிவின் மூலம் ஜனநாயக கடமை ஆற்றுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி டவுன்ஹால் வரை சென்று முடிவுற்றது.

 

மாவட்ட நிர்வாகத்தோடு பொதுமக்களும் இணைந்து தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக ஓட்டுப்பதிவு அமையப்பெற்றுள்ளது என்ற நிலையை அடைய அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...