கோவை : செல்வபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத் மகளிர் அமைப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :- திருநகர் 3-ம் தெருவில் உள்ள வீடுகளின் நடுவே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையில் காலை 6 மணி முதலே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை குடிக்கும் குடிமகன்கள், சாலையில் செல்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
மேலும், கடையின் அருகில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.