கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
நாடளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திர ராஜனும், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச். ராஜாவும், ராமாநாதபுரத்தில் நயினார் ராஜேந்திரனும் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில், இடம்பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.அதில், கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 2 முறை எம்.பி.யான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துதரை செய்யப்பட்ட நிலையில், பா.ஜ.க. சார்பில் மத்திய கயிறு வாரியத்துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1957-ம் ஆண்டு பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் பா.ஜ. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்னர் நடந்த 1999-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். மேலும், பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த சி.பி. ஆர்., தற்போது மத்திய கயிறு வாரிய தலைவராக இருக்கிறார்.
இதேபோல, சி.பி.ஆரை எதிர்த்து களமிறங்கும் தி.மு.க.கூட்டணியின் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜனும் கோவையில் இருந்து இரண்டு முறை எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டவராவார். எனவே, இந்தத் தேர்தலில், பா.ஜ.க., சி.பி.ஐ.(எம்) இடையே கடும் போட்டி நிலவும் என்ப சந்தேகம் இல்லை.