Breaking: மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கோவை : வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


கோவை : வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மாபெரும் கூட்டணியுடன் இந்தத் தேர்தலை சந்திக்கின்றன. பல்வேறு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 21 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: 

*வட சென்னை - ஏ.ஜி.மவுரியா 

* மத்திய சென்னை - நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் 

* திருவள்ளூர் - எம்.லோகரங்கன் 

* அரக்கோணம் - என்.ராஜேந்திரன் 

* வேலூர் - ஆர்.சுரேஷ் 

* கிருஷ்ணகிரி - எஸ்.ஸ்ரீகாருண்யா 

* தருமபுரி - வழக்கறிஞர் வி.ராஜசேகர் 

* விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி 

* சேலம் - ரகுமணிகண்டன் 

* நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன் 

* திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர் 

* நாகப்பட்டினம் - குருவைய்யா 

* தூத்துக்குடி - பொன் குமரன் 

* புதுச்சேரி - எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் 

*சிதம்பரம் - ரவி

இதையடுத்து, வரும் மார்ச் 24ஆம் தேதி கோவையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும், அன்றைய தினம் தெரிவிக்கப்படும், என்றார். 









Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...