கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கேத்தம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாரதி நகர், ஸ்ரீநகர், பாப்பாத்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இந்த பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை, பள்ளி கட்டிடம் சேதமடைந்து அபாய கட்டத்தில் உள்ளது. மாணவர்கள் அரசமரத்து அடியிலும், கிணறு பக்கத்திலும் அமர்ந்து கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், கேத்தம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...