கோவையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் வாக்குப்பதிவு பற்றிய குறும்படங்கள் திரையிட்டு விழிப்புணர்வு

கோவை : கட்டாய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் குறும்படங்கள் திரையிட்டு கோவை மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை : கட்டாய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் குறும்படங்கள் திரையிட்டு கோவை மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர்கள், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ராசாமணி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி வைக்கப்படும் இவ்வாகனமானது, மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை வாக்குப்பதிவு நாள் வரை திரையிட்டு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.



 

அதுமட்டுமல்லாமல், உள்ளுர் கேபிள் சேனல்கள், திரையரங்குகள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும், வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இளம் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், கல்லூரிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலான கட்டுரைப் போட்டிகள், பேச்சுப்போட்டிகள், மற்றும் கவிதை போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுபோலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்திக் காட்டும் வி.வி.பி.ஏ.டி. எனும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் தங்களது தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், வாக்காளர் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், மாவட்டத்தில் 1950 எனும் கட்டணமில்லா தொலைப்பேசி சேவை செயல்பட்டு வருகின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...