ஓ.பி.எஸ்., இ.பி.எஸை இணைத்து அவதூறு கருத்து : நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதலமைச்சரின் பெயரையும், துணை முதலமைச்சரின் பெயரையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதலமைச்சரின் பெயரையும், துணை முதலமைச்சரின் பெயரையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது இவ்வழக்கை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரபரப்பி வருவதாகவும், அவர்கள் மீது அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளம் ஒன்றில், 1 நிமிடம் 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த காணொளியில் பார் நாகராஜனின் திருமணத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த காணொளி பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியாகும். 

மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வினரின் பெயரை சீர்குலைக்கும் பொருட்டு, அந்த சமூக வலைதளங்களில் பார் நாகராஜ் திருமணத்தில் முதலமைச்சர் பங்கேற்றது போன்ற காணொளி பகிரப்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக நீக்கியும், அந்த வீடியோவை பகிர்ந்தவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...