கோவை : நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் விருப்ப மனுக்களை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவல் பணிக்காக வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, கோவை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் தீயணைப்புத்துறை அலுவலர்கள், முன்னாள் வனத்துறை அலுவலர்கள் உள்ளதால், விருப்பமுள்ள அலுவலர்கள் தங்கள் விருப்பத்தை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் தங்கள் விருப்ப மனுவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தப் பொதுத் தேர்தல் பணியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 9443736199, 9498178425 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.