29-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது

கோவை : இதுவரை 28 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்குகிறார்.

கோவை : இதுவரை 28 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்குகிறார். 



கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 28 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 29-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் வேட்பு மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான ராமதுரை முருகனிடம் இன்று அளித்தார்.



பின்னர், இது குறித்து நூர் முகமது கூறுகையில், "ஆண்டிபட்டி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டேன். திருச்சி, திருவாரூர், மதுரை, சாத்தான்குளம், திருச்செந்தூர், திருமங்கலம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இதுவரை போட்டியிட்டு உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் போட்டியிட உள்ளேன். இதுவரை போட்டியிட்டதில் அதிகபட்சமாக 5,000 ஓட்டுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் போட்டியிடுவேன்," என தெரிவித்தார்.

மஞ்சள் தலைப்பாகை அணிந்து ஒவ்வொரு முறையும் மனு தாக்கல் செய்ய வருவதன் காரணம் குறித்து கேட்டதற்கு, "மஞ்சள் நிறம் மங்களகரமானது. மக்கள் மங்களகரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்," என்றார் தேர்தல் மன்னன் நூர் முகமது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...