நொய்யல் ஆற்றை தொடர்ந்து அசுத்தப்படுவத்தால் ஆத்திரம் : காருண்யா பல்கலை., வாயில் முன்பு குப்பைகளை கொட்டிய இளைஞர்கள்

கோவை : நொய்யல் ஆற்றை தொடர்ந்து அசுத்தப்படுத்துவதைத் தடுக்காத காருண்யா பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கொட்டினர்.

கோவை : நொய்யல் ஆற்றை தொடர்ந்து அசுத்தப்படுத்துவதைத் தடுக்காத காருண்யா பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கொட்டினர்.

கோவை - சிறுவாணி சாலையின் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்காக, அங்கு ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக் கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவது ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஓராண்டாக அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. 

இதனிடையே, கடைகளின் குப்பைகளை கொட்டுவதற்கு காருண்யா பல்கலைக்கழகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், குப்பைகள் மீண்டும் நொய்யல் ஆற்றில் கொட்டுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலின் முன்பு கொட்டினர். மேலும், கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இங்கு செயல்பட்டு வரும் கடைகளின் குப்பைகளை, காருண்யா பல்கலைக்கழகமே கையாள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 

"காருண்யா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நல்லூர்வயல் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டது வந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகளை கொட்டுவதற்கு, பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக அங்கு குப்பை கொட்டப்பட்டு வந்தது. தற்போது, அதற்கு அப்பல்கலைக்கழகம் தடை விதித்தது. எனவே, தக்க பாடம் புகட்டியுள்ளோம்," என்றார் சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த ராம்குமார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...