கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், அனைத்து கட்சி அமைப்பினர் என பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் கூறியிருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், மாணவியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.