கோவையில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம் : “மக்கள் தான் எஜமானர்கள், நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு” என்கிறார் சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார்

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார், மக்கள் தான் எஜமானர்கள், நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறினார்.

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார், மக்கள் தான் எஜமானர்கள், நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறினார்.

17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் துவங்கி விட்டன. தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறபட்டு வருகின்றன. கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, இன்று முதல் வேட்பு மனுவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணியிடம் வழங்கினார். 



இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தகுமார் பேசியதாவது :- பண பலத்திற்க்கும், ஜாதிய அரசியலுக்கும் அப்பாற்பட்டு புது முயற்சியாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் தன்னை நம்பி ஓட்டளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு, என்றார். 

வசந்தகுமாரின் மனைவி சசிகலா பானு வழக்கறிஞராக உள்ளார். இவரது ஒரே மகன் சரண் பிரபு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, வேட்பு மனு விண்ணப்பத்தை பெற சமத்துவ மக்கள் கட்சி பொள்ளாச்சி வேட்பாளர் சி.டி.மணிகண்டன் வந்தார். 

இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர வருவதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...