மேட்டுப்பாளையத்தில் பழமைவாய்ந்த மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மைதான மாரியம்மன் கோவிலில் 91 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் திருவிழா கடந்த 5ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது, இதனை அடுத்து கம்பம் நடுதல், கொடியேற்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நடைபெற்று வந்தன. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு முதலே பூக்குண்டம் அமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கு நிகழ்வு நடைபெற்றது. இதனை அடுத்து, அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தலைமைபூசாரி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார். 



இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில், முதுகு பகுதியில் வேல் மற்றும் சூலாயுதங்களை குத்தி ஆண்கள்,பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து குண்டம் இறங்கி வழிபட்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...