நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.,தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.,தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு :-
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை
மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்
மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் கல்வி, மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை இணைஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் வசூல் ரத்து செய்யப்படும்.
தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்புளில் இட ஒதுக்கீடு முறைப்படுத்தப்படும்
கேபிள் டிவி கட்டணத்தை பழைய முறையில் வசூலிக்க நடவடிக்கை
அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு நிலையான இந்திய குடியுரிமை வழங்கப்படும்
பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படும்.
சமூக ஊடகங்களில் பெருகும் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்
தேசிய ஊரக வேலை திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசக் கருவிகள வழங்கப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றியமைக்கப்படும்.
50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
1 லட்சம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிரந்தர வீடு கட்டித் தரப்படும்.
கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.
காவிரி டெல்டா பகுதிகள் பதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் போடாமல், விலை குறைக்கப்படும்.
வேளாண்மைக்கு நாடாளுமன்றத்தில தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் சுய தொழில் செய்ய வட்டியில்லா ரூ.50,000 கடன் வழங்கப்படும்.
சேது சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் செயல்படுத்தப்படும்.