கோவை: மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வானகத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.98 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஆறு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, நகர் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய சாலைகளான அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, கோவை - உதகை சாலை என அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ரவிச்சந்திரன் தலைமையிலான ஒரு குழு இன்று மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பிரிவில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், சோதனையில், இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ. 5.98 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதில், பணத்தைக் கொண்டு வந்தவர் அப்துல் ஹக்கீம் என்பதும், மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் வியாபாரத்திற்காக இந்தத் தொகையை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக பணத்தைக் கொண்டு வந்ததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பின் மேட்டுப்பாளையம் கருவூலத்தில் பணம் சீலிட்டு ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.