கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எஸ்.பி. பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற பெண் நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்றும், நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு எதிராக கல்லூரியின் முதல்வர் செயல்படுவதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.