நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எம். தியாகராஜன் போட்டியிடுகிறார்
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எம். தியாகராஜன் போட்டியிடுகிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர் பட்டியலை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார். அதில், தனித் தொகுதியான நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்து திருப்பூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான எம். தியாகராஜன் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, வட சென்னை, பொள்ளாச்சி, நீலகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
.