பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக சி.மகேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக சி.மகேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் சி மகேந்திரன் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலுடன் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அதிமுக இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு பலம்வாய்ந்த தொகுதியாக இருக்கும் இந்த பொள்ளாச்சி தொகுதியில் தற்போது பெண்கள் பாலியல் விவகாரம் தொடர்பாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும்  சி.மகேந்திரனை எதிர்த்து  திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் போட்டியிடவுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி பகுதியில் எதிர்ப்புகள் இருந்தாலும் சி மகேந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில்  செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...