கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 63
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 63
கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, கோவா திரும்பிய அவர், அரசுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மனோகர் பாரிக்கருக்கு பதிலாக தங்களை ஆட்சி அமைக்க காங்கிரஸ் கோருகிறது. ஆனால், அதற்கு பா.ஜ.க. தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, உடல்நலக் குறைவால் பாரிக்கர் பாதிக்கப்பட்டிருந்த சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் முதல்வர் இல்லாத சூழல் நிலவுகிறது, ஆதலால், மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் மனு அளித்தது. இதையடுத்து, பாரிக்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய முடிவை எடுக்க, பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.