கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கு. சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, பெருமாள் புதூரைச் சேர்ந்த கு. சண்முகசுந்தரம் 1970-ம் ஆண்டு பிறந்தார். இவர் பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரி ஆவர். விவசாயம், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் செங்கற்கள் தொழிற்சாலையை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.
தற்போது, கு. சண்முகசுந்தரம் தி.மு.க.வின் பொறியாளர் அணி மாநில துணைத் செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுள்ளார். மேலும், மடத்துக்குளம் தளபதி தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இருந்துள்ளார்.
தற்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஆளுங்கட்சியை தொடர்புபடுத்தி பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த சூழலைப் பயன்படுத்தி, மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில், பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கு. சண்முகசுந்தரம் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.