பொள்ளாச்சி சம்பவம் : கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அடுத்த மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான அனைத்து குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும், அவர்கள் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...