திருப்பூரில் அ.ம.மு.க. சார்பில் களமிறங்கும் எஸ்.ஆர். செல்வம்

திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.ம.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் ஈரோடு செயலாளர் எஸ்.ஆர். செல்வம் போட்டியிடுகிறார்.

திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.ம.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் ஈரோடு செயலாளர் எஸ்.ஆர். செல்வம் போட்டியிடுகிறார். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று வெளியிட்டார். அதில், கொங்கு மண்டல மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில், அ.தி.மு.க., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளை எதிர்த்து அ.ம.மு.க. சார்பில் களமிறங்கும் எஸ்.ஆர். செல்வம் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், கொங்கு மண்டலத்தில் புது முகத்தை அக்கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 65 வயதான எஸ்.ஆர். செல்வம் திருப்பூரில் முதல்முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

 

சத்தியமங்கலத்தில் உள்ள சனார்பதி கிராமத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க.வின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1989-ம் ஆண்டு பவானிசாகர் அம்மா பேரவையின் செயலாளராகவும், 2001-ம் ஆண்டு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு பவானிசாகர் அ.தி.மு.க. செயலாளராக செயல்பட்ட இவர், பின்னர் ஈரோடு பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.ம.மு.க.வின் ஈரோடு மாவட்ட ஊரக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் இதற்கு முன்னதாக எந்தவொரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கான தேர்தல்களில் போட்டியிட்டது இல்லை. எனவே, இந்தத் தேர்தல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகும். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...