விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் : திருப்பூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் பேட்டி

கோவை : விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக திருப்பூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.


கோவை : விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக திருப்பூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்காக, அனைத்துக் கட்சிகளும் தொகுதி உடன்பாடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயனின் அறிமுக கூட்டம் தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சுப்பராயன் பேசியதாவது :- இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.க அரசையும் அப்புறப்படுத்துவதற்கான தேர்தல். திருப்பூரில் சிறு,குறு தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. 30 சதவிகித தொழில்துறை நலிவடைந்துவிட்டது. 3ல் 2 பங்கு விவசாயம் முடிந்துவிட்டது. மோடி வென்றால் திருப்பூர் சொர்க்கமாக மாறும் என பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், தற்போது சுடுகாடாக மாறியுள்ளதால், அவற்றை மீட்டெடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து திருப்பூரில் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளோம், என்றார். 



இந்த அறிமுக கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...