1980-ல் அடைந்த மக்களவை தேர்தல் படுதோல்வியில் இருந்து அ.தி.மு.க. பாடம் கற்றது. இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சலுகைகளை பெற, அவர்களின் பெற்றோர்களின் வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டுமென்ற உச்சவரம்பு நீக்கப்பட்டது.
1980-ல் அடைந்த மக்களவை தேர்தல் படுதோல்வியில் இருந்து அ.தி.மு.க. பாடம் கற்றது. இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சலுகைகளை பெற, அவர்களின் பெற்றோர்களின் வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டுமென்ற உச்சவரம்பு நீக்கப்பட்டது. அதேசமயம், 31 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அபார வெற்றி பெற்ற காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க நாள் குறித்தது. தி.மு.க. அரசு மீது அ.தி.மு.க. ஊழல் புகார் கொடுத்தது போலவே, அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. ஊழல் புகார் அளித்தது. உடனடியாக அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கலைத்தது. அதற்கு “மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த கட்சி, மாநிலத்தை ஆளும் தார்மீக உரிமையை இழந்து விட்டது” என காரணம் சொல்லப்பட்டது.
நாங்கள் என்ன தவறு செய்தோம்?
”நாங்கள் என்ன தவறு செய்தோம்?” என பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைப்பையே ஆயுதமாக பயன்படுத்தி அனுதாபம் தேடினார். ”யார் பெரியவர்?” என்ற போட்டி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பின்னடைவை தந்தது. சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதற்கு பின் காங்கிரஸ் கட்சியுடன், அ.தி.மு.க. தனது நட்பை மீண்டும் புதுப்பித்தும் கொண்டது. இதற்கிடையே, இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாக இருந்த சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழக்க, அந்த இடத்திற்கு இராஜீவ் காந்தி வந்திருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ”காலிஸ்தான்” என்ற தனி நாடு குரல் எழுந்தது. அதனை அடக்கி ஒடுக்க வேண்டுமென பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். ”ஆப்ரேசன் புளு ஸ்டார்” என்ற பெயரில் இந்திய இராணுவம், சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் நுழைந்து பிரிவினை போராட்டத்தை வழிநடத்திய பிந்தரன்வாலேவை சுட்டு கொன்றது. இதற்கு பழி தீர்க்கும் வகையில், இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அனுதாப அலையை பயன்படுத்தும் நோக்கில் எட்டாவது மக்களவைக்கு 1984-ம் ஆண்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மூத்த தலைவர்கள் இல்லாத காங்கிரஸ் கட்சி, இளம் தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அபார வெற்றி பெற்றது.நேரு, இந்திரா ஆட்சி காலங்களில் கைப்பற்றிய இடங்களை விட, மிக அதிகம். பலக்கூறுகளாக பிரிந்த ஜனதா, இந்திரா அனுதாப அலையில் காணாமல் போனது.
அதேசமயம், இந்த தேர்தலில் புதிதாக ஒரு கட்சி தேர்தல் களத்திற்கு வந்திருந்தது. அது பா.ஜ.க. ஜனதா கட்சியில் இருந்து விலகிய வாஜ்பாய், அத்வாணி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால், பாரதீய ஜனதா கட்சி துவக்கப்பட்டது. போட்டியிட்ட முதல் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
இந்திரா அனுதாப அலையோடு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் உடல் நலம் குறித்த அனுதாப அலையும் சேர்ந்து கொண்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிவரும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வீடியோ, புகைப்படங்கள் ”வெற்றி திருமகன்” என்ற பெயரில் பட்டிதொட்டி எங்கும் ஒளிபரப்பாகின. அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தபடி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானர்.
மக்களவை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே கைப்பற்ற, மீதமுள்ளவற்றை அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வென்றது.
காங்கிரசின் ஹாட்ரிக் வெற்றி :
காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா, முஸ்லிம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை வந்திருந்தன. தி.மு.க. கூட்டணியில் கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். உமாநாத்தினை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சி.கே.குப்புசாமி ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து வந்த 1989 தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உமாநாத்தினை, காங்கிரஸ் வேட்பாளரான சி.கே. குப்புசாமி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னான மக்களவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியான மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.ரமணியை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 64 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சி.கே.குப்புசாமி.
ஹாட்ரிக் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, அடுத்து வந்த தேர்தல்களில் ஒரு முறை கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. தொடர்ந்து அபார வெற்றிகளை பெற்று வந்த சி.கே. குப்புசாமி, அடுத்து வந்த தேர்தலில் இமாலய தோல்வியோடு, கோவை தேர்தல் களத்தில் இருந்து விடை பெற்றார்.
தொடரும்...