நீலகிரி : உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உதகை அருகில் உள்ள முத்தோரை பாலாட என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவர் நண்பரின் திருமணத்திற்கு தாவணை என்ற இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 4 மணியளவில் கார் உதகை மினிக்கு மந்து என்ற பகுதியில், கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளமான, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஒட்டி வந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.