கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் சார்பில் கோவை அ.ம.மு.க.வின் வேட்பாளராக என்.ஆர். அப்பாதுரை களமிறங்குகிறார்.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் சார்பில் கோவை அ.ம.மு.க.வின் வேட்பாளராக என்.ஆர். அப்பாதுரை களமிறங்குகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று (மார்ச் 17) காலை வெளியிட்டார். இதில் 24 மக்களவை தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ம.மு.க.வின் சார்பில் கோவை அ.ம.மு.க.வின் வேட்பாளராக என்.ஆர். அப்பாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சடையகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர். 67 வயதான இவர், இளங்கலை (BA) பட்டம் பெற்றுள்ளார்
1972 முதல் அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வில் பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர், மாவட்ட இணை செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். 1992 முதல் 1996 வரை ஆவின் சேர்மனாக இருந்துள்ளார்.
1989-ம் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போது, அ.தி.மு.க. ஜெ அணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். வெற்றி வாய்ப்பை இழந்த போதும், இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது அ.ம.மு.க. அமைப்பு செயலாளராக இருக்கும் என்.ஆர். அப்பாதுரை, கோவை மக்களவை தொகுதியில் முதல் முறையாக களம் காண்கிறார்.
இதேபோல, பிற தொகுதிகளின் வேட்பாளர் விபரங்களையும் காணலாம் :-
திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா
தென் சென்னை - டாக்டர். இசக்கி சுப்பையா
ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி
விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி
சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம்
நாமக்கல் - சாமிநாதன்
ஈரோடு - செந்தில்குமார்
திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம்
நீலகிரி (தனி) - ராமசாமி
பொள்ளாச்சி - முத்துக்குமார்
கரூர் - தங்கவேல்
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் - ராஜசேகரன்
சிதம்பரம் (தனி) - டாக்டர்.இளவரசன்
மயிலாடுதுறை - செந்தமிழன்
நாகை (தனி) - செங்கொடி
தஞ்சாவூர் - முருகேசன்
சிவகங்கை - தேர்போகி பாண்டி
மதுரை - டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் - வ.து.ந.ஆனந்த்
தென்காசி (தனி) - பொன்னுத்தாய்
நெல்லை - ஞான அருள்மணி