சிறு பறவைகளின் கோடைகால தாகத்தை தணிக்கும் சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பு

கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் இன்றி தவித்து வரும் குருவி போன்ற சிறு பறவைகளின் தாகத்தை தணிப்பதற்காக, தற்காலிக குடிநீர் தொட்டிகளை சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ளனர்.


கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் இன்றி தவித்து வரும் குருவி போன்ற சிறு பறவைகளின் தாகத்தை தணிப்பதற்காக, தற்காலிக குடிநீர் தொட்டிகளை சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ளனர்.



கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள காடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனங்களை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காடுகளில் தற்காலிக குடிநீர் தொட்டியை வனத்துறையினர் அமைத்து வருகின்றனர். யானை, புலி, மான் போன்ற பெரிய மிருகங்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நீரின்றி வறண்டு கிடக்கும் கோவை சின்னவேடம்பட்டி குளத்திற்கு வரும் குருவிகள் போன்ற சிறு பறவைகளுக்காக சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர், சிறு பானைகள் மற்றும் ட்ரேக்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர். குளப்பகுதியில் உள்ள பழங்கள் காய்க்கும் மரங்கள் மற்றும் மரங்கள் நடவு செய்யும் பகுதிகள் என 6 இடங்களில் இந்த தற்காலிக நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் நாள்தோறும், அமைப்பின் உறுப்பினர்கள் நீர் ஊற்றி பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 



சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பி.கே. செல்வராஜ் கூறுகையில், "குளக்கரையில் இருக்கும் பழங்கள் காய்க்கும் மரங்கள் சிறு பறவைகளை வரவேற்கிறது. எனவே, அவற்றிற்காக இங்கு தற்காலிக நீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளப்பகுதியில் கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 50-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இவை, மரங்களின் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரை பயன்படுகிறது," என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...