கோவை : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கண்டித்து சென்னை - பொள்ளாச்சி வரையிலான சுமார் 530 கி.மீ. சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை வாலிபர் ஒருவர் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (28). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை எதிர்த்து சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். சென்னையில் கடந்த 13-ந் தேதி சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கிய பாலாஜி, சென்னை, விழுப்புரம், சேலம், அவினாசி வழியாக சுமார் 530 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்று மாலை பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். பின்னர், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து, பாலியல் புகாரில் சிக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாலாஜி கோரிக்கை வைத்தார். இதற்கு, வருவாய் கோட்டாட்சியரும் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.