கூலி தொழிலாளியின் கணையப் புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றி கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள் சாதனை

கோவை : கூலி தொழிலாளி ஒருவருக்கு ஏற்பட்ட கணையப் புற்றுநோய் கட்டியை அகற்றி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை புரிந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


கோவை : கூலி தொழிலாளி ஒருவருக்கு ஏற்பட்ட கணையப் புற்றுநோய் கட்டியை அகற்றி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை புரிந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.



விருதுநகர் மாவட்டம் சொக்கலாம் பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (36). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக கோவை பி.என்.பாளையம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் முருகானந்தம் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி வயிற்று வலி காரணமாக, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் ஏதாவது பிரச்சினை உள்ளதா..? என்பதைக் கண்டறிய சி.டி ஸ்கேன், அலட்ரா ஸ்கேன் எடுத்தனர். அதில், ஒன்றும் தெரியவில்லை. பின்னர், நடத்த மேல் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மஞ்சள் காமலை பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும், மருத்துவர்கள் நோயாளிக்கு ஏற்பட்ட வயிற்று வலி குறித்து டியூமர் மார்க்கர் பரிசோதனை செய்தனர். அப்போது, கணையத்தில் 6 செ.மீ அளவில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை டாக்டர் நிர்மலா தலைமையில், மயக்க மருந்து துறை டாக்டர் சாந்தா அருள் மொழி, பூங்குழலி அடங்கிய மருத்து குழுவினர் கடந்த 3 வாரத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை அகற்றினர். பின்னர், தொடர்ந்து 7 நாட்கள் முதுகலை மருத்துவர்கள் 24 மணிநேரமும் நோயாளியை சிறப்பாகக் கண்காணித்து உரிய சிகிச்சைகளைக் கொடுத்தனர். இதில், அந்த நோயாளி நலம் பெற்றார்.

இந்த நிலையில், சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை இன்று அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான வசதிகள் இருப்பது பாராட்டுக்குரியது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...