நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் 24-ம் தேதி அறிவிப்பு

கோவை : 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

கோவை : 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1,137 பேர் மனுவை பூர்த்தி செய்து வழங்கினர். அவர்களுக்கான நேர்காணல் கமல்ஹாசன் தலைமையில் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் நேர்காணல் நடத்தினார். 

இந்த நிலையில், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றனர். இதற்கான அறிமுகக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யக் கட்சியினர் பொள்ளாச்சியில், கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...