திருப்பூர் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியினராக இருந்தாலும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணி மாநிலம் முழுவதும் வரும் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சினிமா, சீரியல் மற்றும் குஷ்பு போன்ற நடிகர்களின் நாகரீகமற்ற பேச்சே இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். இந்து முன்னணி பல கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கே ஆதரவளிக்கும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை அளிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. அதேபோல, கை சின்னம், உதயசூரியன் மற்றும் இரட்டை இலையினை மறைக்குமா..? தேர்தல் ஆணையம். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினார்.