பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து உதகையில் போராட்டம் நடத்த முயன்ற த.மு.மு.க.வைச் சேர்ந்த 50 பேர் கைது

உதகை : பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.


உதகை : பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 



பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகள் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று உதகை ஏ.டி.சி. பகுதியில் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

இதனால், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்ற போது, சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...