திருப்பூர் : திருப்பூர் அருகே மது விற்பனை நேரம் முடிந்த பிறகு, மதுபாட்டில் விற்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் மற்றும் பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வஞ்சிபாளையம் பகுதி அருகே அமைந்துள்ள '2002' என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் நேற்று இரவு 10 மணிக்கு கடையை அடைக்க ஊழியர் நல்லேந்திரன் முற்பட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், நல்லேந்திரனிடம் மது பாட்டில்கள் கேட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.

நேரம் முடிவடைந்ததால் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக டாஸ்மாக் ஊழியர் தெரிவித்துள்ளார். இதனை கேட்க மறுத்த அந்த நபர்கள், கடையை அடைக்க வெளியே வந்த போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நல்லேந்திரனை தாக்கினர்.

நல்லேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பார் ஊழியர் கண்ணப்பன் மீதும் அவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். உடனடியாக இருவரையும் மீட்டு ஊழியர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.