தமிழகத்தில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..? : காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் பேட்டி

கோவை : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வலியுறுத்துப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கோவை : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வலியுறுத்துப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர். நடராஜன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆகியோரோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா.எஸ் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது :- பா.ஜ.க ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சுயநலத்தில் உருவாகியுள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர். நடராஜனுக்காக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளோம். எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. வேட்பாளரை விட 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், பி.ஆர்.நடராஜனை வெற்றிபெறுவது உறுதி. 

இதற்கு முன்னர் பல தேர்தல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் இந்திரா காந்தி தென் மாநிலங்களின் பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அதேபோல், மத்தியில் தமிழகம் முக்கியத்துவம் பெரும் வகையில், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட மேலிடத்திற்கு வலியுறுத்தியுள்ளோம். கண்டிப்பாக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என நம்புகிறோம், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...