சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நேற்று வேட்பாளர்களை அறிவித்தன. இந்தக் கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19-ம் தேதி அ. கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.