சூடுபிடிக்கும் கோவை அரசியல் களம் : கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி. ஆர்.நடராஜன் சந்திப்பு

கோவை : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார்.



கோவை : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார்.



வடகோவையில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை நேரில் வந்த அவர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக்கை சந்தித்து ஆலோசித்தார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா. எஸ் ஜெயகுமாரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசால் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி நடவடிக்கையால் கோவையில் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டது. பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் கொங்கு மண்டலத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதில். சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



கோவையைப் பொறுத்தவரையில் மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரை தனியாருக்கு வழங்கும் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம். கோவையின் போக்குவரத்து பிரச்சனைகளை சரிசெய்ய பாலங்கள் கட்டப்படும், பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் இயக்க வலியுறுத்தப்படும். 40 ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலத்தை வழங்கிவிட்டு உரிய இழப்பீட்டுக்காகப் போராடி வரும் மக்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நகரமான கோவையில் மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவுள்ளோம், என்றார்.

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் மற்றும் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகத்தை சந்தித்து கலந்தாலோசித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...